ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.