Home Local இரவு 10 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட எதிர்பார்ப்பு

இரவு 10 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட எதிர்பார்ப்பு

0

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நள்ளிரவுக்கு முன்னதாக பிரதேச மட்டத்திலான தேர்தல் பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.

அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றது. தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீட்டியாகொட பகுதியில் வாக்காளர் ஒருவர் நிழற்படம் எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வாக்காளர் ஒருவர் வாக்குஅட்டையினை கிழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Previous articleதபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்
Next articleஎதிர்வரும் 23 ஆம் திகதி விசேட விடுமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here