Home Local வாக்குச் சீட்டு பொதிகளுடன் சம்பூரில் ஒருவர் கைது

வாக்குச் சீட்டு பொதிகளுடன் சம்பூரில் ஒருவர் கைது

0

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான இரண்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பார்சலின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் சந்தோஷபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமீண்டும் நீண்ட வரிசை
Next articleஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் இரண்டு மணி நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here