தேவைப்பட்டால் நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தயார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுவரை காலமும் அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றுள்ளதாகவும், அதனைத் தொடருமாறு மக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.