நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதற்கான இறுதி நடவடிக்கையாக கருதப்பட்ட தனியார் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தம் நாளை (19ஆம் திகதி) மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலியில் தெரிவித்தார்.
இதன்படி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உத்தியோகபூர்வமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
அரசியலில் நல்லது கெட்டது அனைத்திற்கும் முகங்கொடுக்க வேண்டும் எனவும், நாடு சிரமங்களை எதிர்நோக்கும் போது மக்களைக் காப்பாற்ற பாடுபட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன்படி, அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (19) நடைபெறவுள்ளது, அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீளப்பெறப்படும்