ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அதானி என்ற இந்திய கூட்டுத்தாபனத்தின் 450 மெகாவாட் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் ஊழல் நிறைந்தது என்றும் இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அதானி நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் ஒன்றுக்கு 0.0826 டொலர் செலுத்தி எரிசக்தியை கொள்வனவு செய்வதாகவும், இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு 0.0488 டொலர்களுக்கு வழங்குவதாகவும் திஸாநாயக்க வலியுறுத்தினார்.
“அதானி திட்டத்தின் பாரிய அளவை பொறுத்தவரை, அதன் செலவு குறைவாக இருக்க வேண்டும், ஆனால் அது நேர்மாறானது. இது தெளிவாக ஊழல் கொடுக்கல் வாங்கல் எனவும் கண்டிப்பாக இதனை அரத்து செய்வோம், எனவும் கூறினார். எ
பெப்ரவரி 2023 இல், இலங்கையின் முதலீட்டு அமைப்பு அதானி கிரீன் எனர்ஜியின் 442 மில்லியன் டொலர் காற்றாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, வட இலங்கையில் மன்னார் மற்றும் புனரீனில் ஆலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், இலங்கையில் உருவாகி வரும் கொழும்பு துறைமுகத்தில் 700 மில்லியன் டொலர் செலவில் கொள்கலன் முனையத்தை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.