Home Local நம்பிய தமிழ் மக்களுக்கு செருப்படி வழங்கிய தமிழரசு கட்சி – அங்கஜன்

நம்பிய தமிழ் மக்களுக்கு செருப்படி வழங்கிய தமிழரசு கட்சி – அங்கஜன்

0

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலே எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள் இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் இல்லை வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினார்.

நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை தொடர்பிலும் அவர் தொடர்பான சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

Previous article1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு
Next articleஅதானி நிறுவனத்தின் 450 MW காற்றாலை மின் திட்டம் உடனடியாக நிறுத்தப்படும்! – அநுர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here