கஹட்டகஸ்திகிலியில் நேற்று (10) நடைபெற்ற “ஜயகமு ஸ்ரீலங்கா” பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான தொப்பி அணிந்து கலந்துகொண்டார். இது பலரிடையே பேசப்பட்ட சம்பவமாக இருந்ததுடன், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதற்கு பதிலளித்தார்.
வடக்கில் ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் இந்த தொப்பியை தனக்கு பரிசளித்ததாகவும், அவருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இதை அணிவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
“ஏன் இந்த தொப்பி அணிகிறேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அந்தக் கதையை இப்போது சொல்கிறேன். கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணிக்கு சென்று போது ஒரு வயதான தமிழ் பெண்மணி இந்தத் தொப்பியைக் கொடுத்தார். எங்களுக்கு உணவு கொடுத்தீர்கள், உரம் கொடுத்தீர்கள், மருந்து கொடுத்தீர்கள், எங்களை வாழ வைத்தது நீங்கள்தான் என்று என கூறினார். யாரும் நாட்டை பெறுப்பேற்காத போது நீங்கள் தான் எங்களை காப்பாற்ற முன் வந்தீர்கள் என்றார் . எனவே இந்த பரிசை நான் மிகவும் மதிக்கின்றேன். இது எனக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பான ஒரு பரிசு என ஜனாதிபதி தெரிவித்தார்.