Home Local சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது – அதனை இல்லையென கண்காணிப்பு அமைப்புகள் எவ்வாறு கூற முடியும்

சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது – அதனை இல்லையென கண்காணிப்பு அமைப்புகள் எவ்வாறு கூற முடியும்

0

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், கண்காணிப்பு அமைப்புகள் அதனை பொய்யென கூறுவது எதன் அடிப்படையில் என தமக்கு தெரியாது எனவும், அவ்வாறான நிறுவனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

#AskRanil Youth Q&A சமூக வலைத்தளங்களின் ஊடாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையால் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கண்காணிப்பு அமைப்புகள் எப்படி அமைச்சரவைக்குள் நுழைகின்றன என்று தெரியவில்லை. இவற்றைச் சொல்லும்போது எழும் கேள்வி, இவை உண்மையில் சுதந்திரமானவையா அல்லது அரசியலா என்பதுதான். பல காரணங்களுக்காக சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. சில காலத்திற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக கோரிக்கைகள் வந்தன. சில இடங்களில் வேலை நிறுத்தம் நடந்தது. அப்படி கொடுக்க முடியாது என்றோம். நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். அதன் முடிவுகளுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினோம். அதன்படி, உதய செனவிரத்ன அந்தக் குழுவின் அறிக்கையை எங்களிடம் வழங்கினார். அந்த அறிக்கையின் படி தான் இந்த விடயங்களை செயல்படுத்துகிறோம். 2025க்குள், இந்த அறிக்கையின்படி செயல்பட எங்களிடம் பணம் உள்ளது. அரசு ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என ஜனாதிபதி தெரிவிதத்தார்

சம்பள அதிகரிப்பு பொய்யென ஊடகங்களில் அவதானிப்பு வெளியிடப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous articleநமது பிள்ளைகளுக்காக சவாலை ஏற்கும் நாமல்
Next articleசோதனை செய்து பார்த்ததில் சிக்கலில் மாட்டிக்கொண்ட பங்களாதேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here