Home Local ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்

ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்

0

ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நேற்று (05) நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுகம் மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சாரம் மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நீக்கத்துடன், தீவிர ராஜபக்சஸ ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவர்களை எந்த அரசாங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைப்பதில்லை என்றும் அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

1. மஹிந்த ராஜபக்ஷ
2. சமல் ராஜபக்ஷ
3. நாமல் ராஜபக்ஷ
4. ஷசீந்திர ராஜபக்ஷ
5. சாகர காரியவசம்
6. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
7. ஜயந்த கடகொட
8. சஞ்சீவ எதிரிமான்ன
9. ரஞ்சித் பண்டார
10. டபிள்யூ. டி. வீரசிங்க
11. யு. கே. சுமித்
12. திஸ்ஸ குட்டியராச்சி
13. நிபுன ரணவக்க
14. டி. வி.சானக
15. இந்திக்க அனுருத்த
16. பிரசன்ன ரணவீர
17. இசுரு தொடங்கொட
18. காமினி லோககே
19. மர்ஜான் ஃபலீல்
20. சிறிபால கம்லத்
21. சரத் வீரசேகர
22. தெனுக விதானகமகே
23. சமன்பிரிய ஹெரத்
24. மஞ்சு லலித் வர்ண குமார்
25. நாலக கோட்டேகொட
26. மொஹான் சில்வா
27. சி.பி. ரத்நாயக்க

இருக்க முடியாதவர்கள் செல்லுங்கள்: ஜனாதிபதி கடுமையான தீர்மானம்

அத்துடன், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காத அரசாங்கக் கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவான அமைச்சர்கள் உள்ளிட்ட பல கட்சி அமைப்புக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Previous articleவில்லியம் ஷேக்ஸ்பியரும் சஜித்தின் ஆங்கில வகுப்புகளுக்கு வந்துள்ளார்
Next articleஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் சஜித் – கருத்துக்கணிப்பில் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here