தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம் சரியானது என அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்றிரவு (03) சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடுவுகள் வழங்கப்படாதமையாலும் வடக்கு மக்களுக்குத் அநுரகுமார பற்றித் தெரியாது என்பதாலேயே அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“அனுர வடக்கிற்கு வரவில்லை. அநுர இப்போது வடக்கிற்கு வருகிறார். யாழ்ப்பாணத்திற்கு வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அநுர, 13வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். காணி அதிகாரங்கள் பொலிஸ் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றனவா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அநுரகுமார ஆம் என பதிலளித்தார். இப்போது அதைச் செய்ய மாட்டோம் என்று சொன்னால், அநுரவை ஆதரிக்கப் போவதில்லை என்ற எங்களின் முடிவு சரியானது என்பது தெளிவாகிறது.