சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி உரையாடலை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த சவாலுக்கு தேசிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் தேவையான பேச்சுவார்த்தையை நடத்த தயார் என அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வாரா என்பதை நேரடியாகக் கூறாத சுனில் ஹந்துன்நெத்தி, “நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவோம்” என்றார்.
இது தொடர்பான உரையாடலுக்காக சஜித் பிரேமதாச தரப்பினர் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது தொடர்பான இந்த உரையாடலில் பங்கேற்குமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகியோரை ஜனாதிபதி பகிரங்கமாக அழைத்துள்ளார்.