Home Local வடக்கு கிழக்கு இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை – சஜித்

வடக்கு கிழக்கு இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை – சஜித்

0

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 18 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி நேற்று மாலை மட்டக்களப்பு, ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,

வடக்கு கிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம்.

இதனுடாக வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்போம்.

நாட்டில் மந்த போசனை நிலைமை அதிகரித்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. தேசிய போசாக்கு கொள்கையை நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தி, அவற்றிற்குத் தீர்வு காணுவோம்.

மந்த போசனையே இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தி அதனூடாக ஏற்படுகின்ற அபிவிருத்தியின் பிரதிபலனை மக்களுக்கு கிடைக்கச் செய்வோம்.

அதற்கு மேலதிகமாக கடன் மாபியா காரணமாக மக்களும் கடன் சுமைக்குள் சிக்கி இருக்கின்றார்கள்.

சூறையாடும் ஒன்லைன் கடன் மாபியாவில் இருந்து மக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம் என சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.

Previous articleஎந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை – கத்தோலிக்க திருச்சபை
Next articleNPP அரசாங்கத்தின் கீழ் சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here