இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024 ஆம் ஆண்டிற்கான “A” தரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
மத்திய வங்கி ஆளுநர்களின் தரவரிசைக்காக குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் மத்திய வங்கியின் ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவம் மற்றும் மூலோபாய நிபுணத்துவத்தை இது பிரதிபலிக்கிறது, மேலும் இந்த “A” தரமானது பணவீக்க மேலாண்மை, பொருளாதார வளர்ச்சி, நாணய ஸ்திரத்தன்மை போன்ற முக்கிய துறைகளில் ஆளுநரின் வெற்றியைக் காட்டுகிறது.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கி ஆளுநர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் இந்த விருது, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் சிறந்த செயற்பாடுகளையும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அவரது அர்ப்பணிப்பையும் வலியுறுத்துவதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.
முழுப் பட்டியல் குளோபல் ஃபைனான்ஸ் அக்டோபர் இதழிலும் GFMag.com இணையதளத்திலும் பார்வையிடலாம்