எரிசக்தி, மின்சாரக் கட்டணம் மற்றும் கொள்வனவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் கொள்கை தொடர்பில் எந்தவொரு விவாதத்திற்கும் தயார் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு லோரிஸ் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை ஜே.வி.பி தடுத்து அரசியல் பிரச்சினைகளாக மாற்றியமையினால் நாட்டின் எரிசக்தி துறை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
செய்வதை எல்லாம் எதிர்க்கக்கூடாது என்ற கொள்கைக்கு வந்தால் நாடு முன்னேறலாம் என்று கூறிய அமைச்சர், வந்து செய்வேன் என்று சொல்லும் தலைவரா அல்லது அதை செய்தி காட்டிய தலைவரா? இந்த நாட்டுக்கு தேவை என கேள்வி எழுப்பினார்.