நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மீட்சிப் பெற்றுள்ளது சமுர்த்தி திட்டங்கள் 3 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சகல மக்களையும் இணைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.