Home Local தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன

0

மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுவதே ஊடகங்களே எனவும், தூக்கு தண்டனைக்கு உள்ளானவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று (15) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் திருடர்களையும், திருட்டில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் கூறினார்.

அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சரத் பொன்சேகா, நாட்டின் தலைவராவதற்கு ஆசைப்படுபவர் யாராக இருந்தாலும், நாட்டை அதைவிட சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு உயர்தரத்துடன் உழைத்தவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா,

“கோட்டாபயவை உயிரை கொடுத்து ஊடகங்கள் தூக்கிவிட்டன கடைசியில் அடிபட்டு நாடு ஓடியதும் ஊடகங்கள் உயிர்பெற்றன. இந்த நேரத்திலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்..மக்கள் ஊடகங்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், பலர் கூட்டங்களுக்கு வருவதில்லை, ஊடகங்களை பார்க்கிறார்கள், ஊடகங்கள் முடிந்தவரை மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

 

Previous articleவிமான நிலையத்திற்கு A/C பஸ் வேண்டாம் – தொழிற்சங்கமொன்று போராட்டம்
Next articleநாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here