Home Business தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி

0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது .

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Previous articleசஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி
Next articleகட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here