வீதியில் இறங்கி கோசங்களை எழுப்புவதன் மூலம் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கம் தொடர்பில் கொழும்பில் கடந்த புதன்கிழமை (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவு சங்க வலையமைப்பின் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பெருந்தொகையான பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
IMF மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் காரணமாக நாங்கள் இப்போது மீண்டு வருகிறோம். அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டால், நாம் மீண்டும் பழைய வரிசைகளில் நிற்கும் நிலைக்கே செல்வோம். நாங்கள் 17 முறை IMF ஒப்பந்தங்களை உடைத்தோம். 18 வது முறையாக உடைந்தால், மீண்டும் அமுல்படுத்த மாட்டோம் என அவர்கள் கூறினேன்”.