ஜனாதிபதி தேர்தலுக்கான அதி விசேட வர்த்தமானியைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைக் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் இன்று முதல் செலுத்தலாம்.
தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏற்கப்படும்.
இதன்படி நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும்.