Home Local ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு

0

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவு மூலம் 7 இலட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச
Next articleஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here