இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதாக ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்றது.