ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரி நேற்று 21ஆம் திகதி பிற்பகல் கடவத்தை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஒன்றாக வெற்றியடைவோம் -நாம் கம்பஹ (“ஏக்வ ஜய கமு – அபி கம்பஹா”) பொதுக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 26 அமைச்சர்களுடன் கம்பஹா உள்ளூராட்சி பிரதிநிதிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இடம்பெற்ற “ஏக்வ ஜய கமு – அபி கம்பஹா” பேரணியில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்துகொண்ட போது, பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பேரணி நாமல் ராஜபக்ஷ தலைமையில் பிங்கிரியில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டதுடன், பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களே பேரணியில் கலந்துகொண்டனர்.