ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.
இதன்போது வேட்புமனுக்கள் கோரல் என்பன குறித்தும் அறிவிக்கப்படு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (17) முதல் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் இருந்தாலும், பொருத்தமான திகதியைத் தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், தேர்தல் திகதியை அறிவிக்க ஆணைக்குழுவிற்கு கால அவகாசம் தேவை என்று அவர் மேலும் விளக்கினார்.