அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிறியளவிலான நோய் அறிகுறிகளுடன் தற்போது மூன்றாவது முறையாகவும் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாத் தொற்றுக் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை அவர் இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது