Home Local ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

0

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Previous articleமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்
Next articleஐந்து வகையான உரங்களின் விலை குறைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here