Home Local இம்மாத இறுதியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ள பொதுஜன பெரமுன

இம்மாத இறுதியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ள பொதுஜன பெரமுன

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகம், ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அச்சமடைந்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு இணங்குகின்ற வேட்பாளரை இம்மாத இறுதியில் அறிவிக்க உள்ளதுடன், வேட்பாளரை நியமிப்பதில் நாம் அவசரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅனுரகுமார ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன் – ஜனாதிபதி
Next articleஜனாதிபதி தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனு தள்ளுபடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here