போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொம்பனி வீதியையும் நீதிபதி அக்பர் மாவத்தையையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) திறந்து வைத்துள்ளார்.