Home Local மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை செப்டம்பரில் – நீதிமன்றம் அறிவிப்பு

மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை செப்டம்பரில் – நீதிமன்றம் அறிவிப்பு

0

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாகக் தெரிவித்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திர இந்த மனுவை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous articleபுகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்பில் பந்துலவின் அதிரடி தீர்மானம்
Next article1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் – ஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here