அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் நேற்று (10) நடந்த பேச்சுவார்த்தையில் 1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
தான் முகநூலில் அரசியல் செய்யும் வாய்ச் சொல் வீரரல்ல, செயல் வீரன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று (நேற்று ) மதியம் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு நடந்தது.செவ்வாய்க்கிழமை நான் இந்த சபையில், ஆர்ப்பாட்டங்களின் பின்னர் 1700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக கூறியிருந்தேன். இன்று 9 நிறுவனங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்க தமது இணக்கத்தை தெரிவித்துள்ளன என்பதை இந்த சபையில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.இதேபோன்று கூடிய விரைவில் ஒரு தீர்வுவரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.