Home Local இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் – ஜனாதிபதி

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் – ஜனாதிபதி

0

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாா். நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை.

சம்பந்தனுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அயராது உழைத்தவர். அவரது அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவோம்.

2018ஆம் ஆண்டு அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் போது எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளுடன் சம்பந்தன் செயற்பட்டார்.

அத்துடன், யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும், இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் அதன் பின்னரே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Previous articleஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் – சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
Next articleதுப்பாக்கிச் சூட்டில் ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் உயிரிழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here