Home Local ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் – சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் – சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

0

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலதிபர், சி.டி.லெனவவினால் கடந்த புதன்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போ​தைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகாலத் தடை உத்தரவினைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleசுற்றலாத் துறையில் உயர் வளர்ச்சி – வருடத்தின் முதல் பாதியில் 1.5 பில்லியன் டொலர் வருமானம்
Next articleஇந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here