இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டின் சுற்றுலா வர்த்தகமானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர் வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகத்தின் வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா வணிகம் 1.56 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கான (YoY) வளர்ச்சியின் அடிப்படையில் 77% அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சுற்றுலாத் துறை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு23% அதிகரிப்பு ஆகும்.
ஜூன் மாதத்தில், 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது முதல் நான்கு மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 200,000 மாதாந்திர வருகையிலிருந்து குறைந்துள்ளது.
மே மாதம் இலங்கைக்கு வந்த 112,128 சுற்றுலாப் பயணிகளில் வருகையில் 154.0 மில்லியன் டொலர்களை மட்டுமே சுற்றுலாத்துறை ஈட்ட முடிந்துள்ளது.
சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய துறையாக மாறியுள்ளதுடன் இதனை மேலும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.