1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஓய்வூதியம் பெறாத தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர் சேமலாப நிதியம் நிறுவப்பட்டுள்ளது.
தற்போதைய சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உறுப்பினர்களுக்கு தரமான மற்றும் திறமையான சேவையை வழங்கவும், மேற்கூறிய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காகத் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.