Home Local கெஹலிய குடும்பத்தின் 09 கோடி வைப்புத் தொகைக்கு தடை

கெஹலிய குடும்பத்தின் 09 கோடி வைப்புத் தொகைக்கு தடை

0

கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு சொந்தமான 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதி பத்திரங்களை தடைசெய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலையீட்டின் பேரில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உரிய , 93.125 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் திட்டங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பணமோசடி குற்றத்தின் கீழ் 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதித் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

Previous articleஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு
Next articleஜனாதிபதியை சந்தித்த நான்கு நாட்டு தூதுவர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here