Home Local தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை இன்று வௌியீடு

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை இன்று வௌியீடு

0

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (24) புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு கடந்த ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாது. மேலும் பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முன்னைய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
Next articleஇராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here