Home Today ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் – முழுமையான புலனாய்வு அறிக்கை குறித்து விசாரிக்க புதிய குழு

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் – முழுமையான புலனாய்வு அறிக்கை குறித்து விசாரிக்க புதிய குழு

0

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வவுணத்தீவு கொலை விவகாரத்துடன் எல்.டீ.டீ.ஈ அமைப்பினர் தொடர்புபட்டிருந்ததாக இராணுவ புலனாய்வுச் சபையினால் (DMI)அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கைக்கு கிடைக்கும் IMFஇன் மூன்றாம் கொடுப்பனவு
Next articleதபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here