மேல் மாகாணம் தவிர்ந்த, ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என சப்ரகமுவ மாகாண செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை இந்த வசதியை கடந்த 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருடாந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை சப்ரகமுவ மாகாண வளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 29 பிரதேச செயலக அலுவலகங்களிலும் இதனை பெற்றுக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்