Home Business புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு விரைவில் அங்கீகாரம்

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு விரைவில் அங்கீகாரம்

0

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்வரும் ஜுலை மாத நடுப்பகுதியில் அங்கீகாரம் வழங்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்

அதன் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்படும் எனவும் இறுதி முடிவு ஜூலை இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜூலை 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி
Next articleஜனாதிபதி ஜோ பைடனின் மகனை குற்றவாளி என அறிவித்த அமெரிக்க நீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here