தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி- கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் – இலங்கை நட்புறவின் அடையாளமாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி இந்த ஆறு மாடி மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.