Home Local ஜனாதிபதியால் யாழில் 234 ஏக்கர் காணி விடுவிப்பு

ஜனாதிபதியால் யாழில் 234 ஏக்கர் காணி விடுவிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள் இராணுவத்தினர் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Previous articleஎதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
Next articleநாட்டில் சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here