அநுரகுமார திஸாநாயக்க இரண்டாவது கோட்டாபய எனவும், அவரை நம்பி மக்கள் மீண்டும் ஏமாற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர் தஷிக முதலிகே தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு.அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோரின் இந்திய விஜயம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த இரண்டாவது கோட்டாபயவை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். கோட்டாபயவின் பயணம் நினைவிருக்கிறதா? தேசிய மக்கள் சக்தியின் இந்த அறிவுஜீவிகள் குழுவிற்கும் ‘வியத்மகவிற்கும்’ எந்த வித்தியாசமும் இல்லை.
இந்தியாவுக்கு விற்போம் என்று கூச்சல் போட்டவர்கள், இப்போது டெண்டர் போட்டு விற்பது சரி என்கிறார்கள். இவ்வாறு பொய் சொல்லாதீர்கள் என அநுரகுமார அவர்களிடம் நான் கூற விரும்புகின்றேன் .
88-89 காலகட்டத்தில் இந்திய விஸ்தரிப்புவாதத்தில் நம்பிக்கை வைத்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அறுபதாயிரம் பேர் இறப்பதற்கு முன் ஜேவிபியை மூளைச்சலவை செய்ததற்காக இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். ஜனாதிபதி அந்த பயணத்தை தயார் செய்திருந்தால், ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும் மக்கள் சக்தி படித்தவர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் இடம் கொடுக்கிறது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. படித்த, புத்திசாலிகளுக்கு இடம் இருந்தால் ஏன் ஹரிணி அமரசூரிய இந்திய சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்படவில்லை என்று ஜே.வி.பியிடம் கேட்கிறோம். என்றும் கூறினார்