Home Local மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்த ஜனாதிபதி

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்த ஜனாதிபதி

0

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் (Roger Cook) மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong), ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் சற்று முன்னர் நடைபெற்றது.

அத்தோடு ஜனாதிபதி, அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று காலை பேர்த் நகரில் சந்தித்தார்.

இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், அதற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தார்.

காலநிலை மாற்றம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் ஊடாக, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள் இதன்போது தெரிவித்தனர்.

Previous articleஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள 3000 பாடசாலைகள்
Next articleஅனுரவின் முகநூல் படைக்கு விடப்படும் சவால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here