Home Local இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுர

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுர

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் அழைப்பின் பிரகாரம், திரு. அனுரகுமார திஸாநாயக்க இந்திய விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் அரச தலைவரைத் தவிர, பொதுவாக எதிர்க்கட்சித் தலைவரே இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் ஆனால் அனுரகுமாரவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டதன் மூலம் இலங்கையின் எதிர்கால எதிர்கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என்பதனை இந்தியா உறுதிப்படுத்திவிட்டது.

அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பதற்கு முன்னர், கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் அரச உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.

Previous articleதம்புள்ளையில் ஆரம்பமாகும் உரிமை
Next articleபுத்துருவகல மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here