Home Business முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்

முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்

0

விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு விசேட நலன்களை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூ. 16 பில்லியன்) அதிகமான முதலீடுகளுக்கு இரண்டு வருட வரிச் சலுகை காலம் மற்றும் எஞ்சின் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரை வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யும் வசதி ஆகியவை வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முதலீட்டாளர்களுக்கு 05 – 10 வருட காலத்திற்கு வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் அது இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 100 உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கைக்கு ஈர்க்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படவுள்ளது. இரணவில, பிங்கிரிய, பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கசந்துரை பிரதேசங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை ஸ்தாபிப்பதற்கும் 2024 வரவு செலவுத் திட்டம் வசதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி
Next articleஅடுத்த மாதம் நாட்டில் திறக்கப்படவுள்ள புதிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here