Home Local திடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்

திடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்

0

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு குறுகிய பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த குறுகிய பயணித்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயம் பிரான்ஸ் குடியரசுத் தலைவரால் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleTwitter லோகோவில் மாற்றம்
Next articleபணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here