மீப்பேயில் அமைந்துள்ள MRC அசோசியேட்ஸ் கார்மென்ட் (பிரைவேட்) மூடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Hirdaramani குழுமம், உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் முக்கிய சந்தைகளில் ஆடைகளுக்கான தேவை குறைந்து வருவதே இந்தத் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவிற்கு முக்கியக் காரணம் என்று Hirdaramani குழுமம் வலியுறுத்துகிறது.
உலகளாவிய தேவை குறைந்து வருவதால், குழுவின் திறனைக் குறைக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் அனைத்து நிலைமைகளும் சீரானவுடன் தொடர்புடைய தொழிற்சாலையில் மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிவிப்பில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் பணிபுரிந்த பணியாளர்கள் நாட்டிலுள்ள அவர்களது ஏனைய தொழிற்சாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையில் அதன் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனைக் குறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், நாட்டில் ஆடைத் துறையின் வளர்ச்சியை உயர்த்துவதற்கான அதன் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக Hirdaramani குழுமம் வலியுறுத்தியுள்ளது.