Site icon Newshub Tamil

அமெரிக்க செனட் சபையில் மன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க்

சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பேஸ்புக், எக்ஸ், டிக்டாக், ஸ்னாப்சட் போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தொலைக்காட்சி நேரலையில் நடந்த விசாரணையில் முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசிய காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.

சமூக வலைத்தளங்களால் அச்சுறுத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டு பணத்தை இழப்பது, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, மன நிம்மதி இழந்து சிறு வயதிலேயே உயிரை மாய்த்துக்கொள்வது என அடுக்கடுக்கான முறைப்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களுடன் அங்கு வந்திருந்த பெற்றோரிடம், பேஸ்புக் நிறுவுனர் மார்க் சஅமெரிக்க செனட் சபையில் மன்னிப்பு க்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்புக் கோரினார்.

Exit mobile version