Site icon Newshub Tamil

ட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது.

இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

ட்விட்டர் செயலியின் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதேபோல் பல ஆண்டுகளாக அதன் அடையாளமாக இருந்த நீலப்பறவையை மாற்றி எக்ஸ் என்ற லோகோவை கொண்டு வந்தார்.

இந் நிலையில் எக்ஸ் என்ற ஒளிரும் சின்னம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டது.

ஆனால் இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒரே நாளில் 24 முறைபாடுகள் சென்றன.

மேலும் நகர நிர்வாகத்திடம் இதற்கு உரிய அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த எக்ஸ் சின்னம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சான்பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version