Site icon Newshub Tamil

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தி வரும் நிலையில், தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.

யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை மேற்கொண்டிருபபதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Exit mobile version